LOADING...
இன்று ஸ்பெயினுக்கு புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

இன்று ஸ்பெயினுக்கு புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

எழுதியவர் Sindhuja SM
Jan 27, 2024
11:37 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் சென்னையில் வைத்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் தமிழக அரசுடன் கையெழுத்தாகின. அதன் மூலம் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில், மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று இரவு சென்னையில் இருந்து விமானத்தின் புறப்படும் அவர், துபாய், ஸ்வீடன், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சென்று தொழிலாலதிபர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார். 10 நாட்கள் தொடர இருக்கும் அந்த பயணத்தை முடித்துவிட்டு அவர் வரும் 7ஆம் தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார்.

ட்விட்டர் அஞ்சல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளிநாடு பயணம்