Page Loader
மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க நவீனமயமாக்கப்படும் சென்னை பள்ளிகள் 
மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க நவீனமயமாக்கப்படும் சென்னை பள்ளிகள்

மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க நவீனமயமாக்கப்படும் சென்னை பள்ளிகள் 

எழுதியவர் Nivetha P
Jun 12, 2023
01:19 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மாநகராட்சி பொறுப்பின் கீழ் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கிவருகிறது. இதில் 38 உயர்நிலைப்பள்ளிகளும், 32 மேல்நிலைப்பள்ளிகளும் அடங்கும். இப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல்திறனை மேம்படுத்த பல்வேறு நவீனத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் திறனை அதிகரிக்க தினமும் காலை ஆங்கிலத்தில் இறைவணக்க கூட்டம் தனியார் பள்ளியில் நடப்பது போல் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து,'சிட்டீஸ்'என்னும் திட்டத்தின்கீழ் சர்வதேசத்தரம் கொண்ட பொலிவுறு வகுப்பறைகள், விளையாட்டு அரங்கங்கள், மைதானங்கள் உள்ளிட்டவை 28 நகராட்சி பள்ளிகளில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது சென்னை-நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதற்கான பணிகள் நடந்துவருவதாக தெரிகிறது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இ.இறைவன் கூறுகையில், "சென்னையின் பழமையான பள்ளிகளில் ஒன்று தான் இந்த நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி" என்று கூறினார்.

பள்ளிகள் 

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் 

தொடர்ந்து பேசிய அவர்,"இப்பள்ளி வளாகத்தில் தற்போது கிரிக்கெட் பயிற்சியளிக்கும் வகையிலான 6 ஆடுகளங்கள், கபடி, கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட நவீனப்பயிற்சி மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஹாக்கி'கான அரங்கும் அமைக்கப்படவுள்ளது. அதனையடுத்து, படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்காக தொழில்துறைச்சார்ந்த ஜவுளித்துறை, செவிலியர் வகுப்பு போன்ற பிரிவுகளும் 11மற்றும் 12ம்வகுப்புகளில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும் இப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் உள்ளிட்டவை கட்டப்படவுள்ளது. இதனிடையே, 15 ஆண்டுகளுக்கு முன்னர் 1,500 பள்ளி மாணவர்கள் பயின்றுவந்த நிலையில் தற்போது 300மாணவர்கள் மட்டுமே இப்பள்ளியில் பயின்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தனியார் பள்ளிகளின் அதிகரிப்பு மற்றும் தமிழ்வழி கல்வி முறையில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதே இதற்கு காரணம் என்பது குறிப்பிடவேண்டியவை.