சென்னையின் ஐகானிக் உதயம் தியேட்டர் மூடப்படுகிறது
சென்னையின் பிரபலமான அடையாளத்தின் ஒன்று உதயம் தியேட்டர். அந்த திரையரங்கம் தற்போது மூடுவிழா காணவுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. உதயம் தியேட்டர் உரிமையாளர், அந்த இடத்தை சென்னையின் பிரபலமான கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. உதயம் திரையரங்கம் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை அசோக் பில்லரில் அமைந்துள்ள இந்த உதயம் தியேட்டர் எத்தனை மால்கள் வந்தாலும், பி மற்றும் சி சென்டர் ரசிகர்களுக்கு ஏற்ற இடமாக இருந்தது. அதே நேரத்தில், படத்தின் உண்மையான வெற்றி தெரிய வேண்டுமென்றால், இந்த தியேட்டருக்கு சென்று பார்த்தாலே கணித்து விடலாம் என பல திரைப்பட வல்லுநர்கள் கூறியதுண்டு. அப்படிப்பட்ட இந்த திரையரங்கம் காலத்தின் கட்டாயத்தால் மூடுவிழா காணவுள்ளது.