Loading...
ரிப்பன் மாளிகையில் கொதித்தெழுந்த மேயர் பிரியா: அதிகாரிகளுக்கு எதிராக மாமன்றக் கூட்டத்தில் காரசார விவாதம்
மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர். பிரியா தலைமையில் நடைபெற்றது

ரிப்பன் மாளிகையில் கொதித்தெழுந்த மேயர் பிரியா: அதிகாரிகளுக்கு எதிராக மாமன்றக் கூட்டத்தில் காரசார விவாதம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 29, 2026
05:39 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர். பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசு விழாக்கள் மற்றும் நலத்திட்டத் திறப்பு விழாக்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் மண்டலத் தலைவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக உறுப்பினர்கள் குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டனர். துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் கவுன்சிலர்களின் புகார்களை தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, தானும் இதே போன்ற புறக்கணிப்புகளை சந்தித்து வருவதாகத் தெரிவித்து கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஆவேசம்

"மாநகராட்சியை கலைத்துவிட்டுப் போங்கள்": மேயர் ஆவேசம்

முதலமைச்சர் ரிப்பன் மாளிகைக்கு ஆய்வுக்கு வரும் நேரம் குறித்து தனக்கு முன்கூட்டியே முறைப்படி தெரிவிப்பதில்லை என்றும், அதற்காக காலை முதல் இரவு வரை காத்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

ஓராண்டு காலம் பாடுபட்டு கவுன்சிலர்கள் கொண்டுவரும் திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) திறந்து வைப்பதாகவும், திட்டத்திற்கு உழைத்த கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை என்றும் சாடினார்.

அதிகாரிகள் அரசியல் சார்பின்றி செயல்பட வேண்டும் என வலியுறுத்திய மேயர் பிரியா, மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை அளிக்க விருப்பமில்லை என்றால் மாநகராட்சியை கலைத்துவிட்டு அதிகாரிகளே கூட்டத்தை நடத்திக்கொள்ளலாம் எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

விளக்கம்

ஆணையர் சமீரன் அளித்த விளக்கம்

மேயர் மற்றும் கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய மாநகராட்சி ஆணையர் சமீரன், அரசு மற்றும் மாநகராட்சி நிகழ்ச்சிகளுக்கு அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் முன்கூட்டியே அழைக்க வேண்டும் எனச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தவறு செய்த மக்கள் தொடர்பு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, இனி அனைத்துப் பிரதிநிதிகளும் ஒருங்கிணைக்கப்படுவார்கள் என உறுதியளித்தார்.

ADVERTISEMENT