செந்தில் பாலாஜி வழக்கு: ஜூன் 12 வரை காவல் நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை, ஜூன் 12 வரை மேலும் நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில், கடந்த ஜூன் 14 ஆம் தேதி, தமிழ்நாடு மாநில அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அந்த சமயத்தில், அவருக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவமனைக்கே நேரடியாக வந்த உயர் நீதிமன்ற நீதிபதி, அவரை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர், செந்தில் பாலாஜி நீதிமன்ற உத்தரவு பெற்று, தனியார் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கே அவருக்கு கடந்த ஜூன் 21ம் தேதி இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
card 2
காவலை நீடித்த உயர் நீதிமன்றம்
இந்நிலையில் அவர் உடல் நலம் தேறி வருவதாக மருத்துமனை அறிவித்தது.
இருப்பினும், தொடர்ந்து 20 நாட்கள் செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்றும், அவர் தனது இயல்பு நிலைக்கு திரும்பும்வரை மருத்துவ கண்காணிப்பு அவருக்கு தேவை என்றும் காவேரி மருத்துவமனை அறிவித்தது.
அதனால் அமலாக்கத்துறையினரால், அவரிடம் விசாரணை மேற்கொள்ளவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், அவரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை காணொளி மூலமாக ஆஜர் படுத்தி, அவரின் காவலை மேலும் 14 நாட்கள், அதாவது, ஜூன் 12 வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.