
அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
வீட்டு வசதி வாரியத்தின் வீடு ஒதுக்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது, 2012ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஐ.பெரியசாமியை விடுவித்தது.
இந்த வழக்கினை, தானாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, மார்ச் 28ம் தேதிக்குள் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்த வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உத்தரவிட்டுள்ளார்.
கூடவே இந்த வழக்கு விசாரணை இன்னும் 5 மாதங்களில், அதாவது ஜூலை 2024க்குள் முடிக்கவேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
— Sun News (@sunnewstamil) February 26, 2024
வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு மார்ச் 28ம் தேதிக்குள் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.…