LOADING...
சென்னையில் வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு: போக்குவரத்து மாற்றம் முழு விவரம்
சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது

சென்னையில் வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு: போக்குவரத்து மாற்றம் முழு விவரம்

எழுதியவர் Venkatalakshmi V
May 04, 2026
07:49 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் 3 முக்கிய மையங்களில் எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கையை ஒட்டி அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் சென்னை முழுவதும் 4 அடுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையங்கள்

சென்னையின் முக்கிய வாக்கு எண்ணிக்கை மையங்கள்

சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கீழ்க்கண்ட கல்லூரிகளில் நடைபெறுகிறது: 1. லயோலா கல்லூரி: மிக முக்கிய விஐபி தொகுதிகளின் வாக்குகள் இங்குதான் எண்ணப்படுகின்றன. தொகுதிகள்: பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர். * முக்கிய வேட்பாளர்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் நடிகர் விஜய் போட்டியிட்டுள்ள பெரம்பூர் தொகுதி ஆகிய நட்சத்திர தொகுதிகளின் வாக்குகள் இங்கு எண்ணப்பட்டு வருகின்றன. 2. ராணி மேரி கல்லூரி: தொகுதிகள்: ஆர்.கே. நகர், திரு.வி.க. நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி. 3. அண்ணா பல்கலைக்கழகம்: தொகுதிகள்: விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி.

போக்குவரத்து மாற்றங்கள்

லயோலா கல்லூரியை சுற்றி போக்குவரத்து மாற்றங்கள்

லயோலா கல்லூரியில் முக்கியத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுவதால், இன்று அதிகாலை 4:00 மணி முதல் அப்பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. சூளைமேடு மற்றும் வள்ளுவர் கோட்டம்: இந்த பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக ஸ்டெர்லிங் சாலை மற்றும் லயோலா கல்லூரி சாலைக்குச் செல்ல அனுமதி இல்லை. அதற்குப் பதிலாக மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுகின்றன. ஸ்டெர்லிங் சாலை: ஸ்டெர்லிங் சாலை சந்திப்பிலிருந்து கல்லூரி நோக்கிய சாலைகள் முழுமையாக மூடப்பட்டு, காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி துணை ராணுவப் படையினர், தமிழ்நாடு சிறப்புப் படை மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட சுமார் 1,160 காவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement