NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்
    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்
    இந்தியா

    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்

    எழுதியவர் Nivetha P
    March 14, 2023 | 12:23 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்
    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சமீபகாலமாக தொடர்ந்து வாகன தணிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். போக்குவரத்து விதிமீறல்களை கட்டுக்குள் கொண்டுவர கடந்த அக்டோபர் மாதம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000ஆயிரம் அபராதம் செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதிக தொகை என்பதால் பலரும் அந்த அபராதத்தினை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் 7.532 குடிபோதை வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவந்துள்ளது. எனவே இதுகுறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் மூலம் தகவலளித்து நேரில் வரவழைத்து வழக்குகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அழைப்பினை ஏற்று 545பேர் ஆஜராகி அவர்களது நிலுவைத்தொகையினை செலுத்தியுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதன்மூலம் 10 அழைப்பு மையங்களில் 816 வழக்குகள் தீர்வுகாணப்பட்டு அபராத தொகையாக ரூ.84,82,500 செலுத்தப்பட்டுள்ளது.

    அசையும் சொத்துக்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்

    கடந்த 6 வாரங்களில் இந்த நடவடிக்கை மூலம் 4,922 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.5.09 கோடி அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 7வது வாரத்தில் நிலுவையில் இருந்த 5,738 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.5,93,78,500 அபராத தொகை வசூலாகியுள்ளது என்று கூறப்படுகிறது. அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதனை செலுத்தாவிடில் அவர்களது வாகனம் மட்டுமின்றி வேறு வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் இருந்தால் அதனுள் ஒன்றினை பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே இது போன்று மது போதையில் வாகனம் ஒட்டிவிட்டு அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய 347 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    போக்குவரத்து காவல்துறை
    போக்குவரத்து விதிகள்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் உச்சத்தை தொட்ட தினசரி மின்தேவை - 17,647 மெகாவாட்டாக அதிகரிப்பு இந்தியா
    எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு: அதிமுக போராட்டம் எடப்பாடி கே பழனிசாமி
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது கோவை
    பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு சுற்றுலாத்துறை

    போக்குவரத்து காவல்துறை

    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி

    போக்குவரத்து விதிகள்

    உலகின் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசை - ஜப்பான் முன்னிலை, பின்னுக்கு சென்ற இந்தியா! வாகனம்
    போக்குவரத்தில் ஒழுங்கீனமான நகரம் என்றால் டெல்லி தான்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி தொழில்நுட்பம்
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி தமிழ்நாடு
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023