Page Loader
சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி 
சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி

சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி 

எழுதியவர் Nivetha P
May 29, 2023
07:17 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்தினை தனியார் மயமாக்குதலினை கண்டித்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறை 400 ஓட்டுநர்களை நியமிக்க முடிவு செய்து, சென்னை, கும்பகோணம், திருச்சி போன்ற 12 மாவட்டங்களின் பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் ஒப்பந்த ஓட்டுநர்கள் பணியமர்த்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சென்னையில் மட்டுமே பல்லவன் சாலை, கோயம்பேடு போன்ற ஒவ்வொரு பணிமனையிலும் நாள் ஒன்றுக்கு 40 ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமிக்கப்பட இருந்தனர். இந்நிலையில், அரசு அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் ஒப்பந்தத்தை கோரலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்த நிலையில் போராட்டம் துவங்கியுள்ளது.

போராட்டம் 

பேருந்துகளை இயக்க நடவடிக்கை - தொமுச நடராஜன்

அரசு போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து திடீரென போக்குவரத்துத்துறை ஊழியர்கள் பேருந்துகளை பணிமனைக்கு எடுத்து செல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலுள்ள 32 பணிமனைகளில் பேருந்துகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு வருவதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது. தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தனியார் ஏஜென்சி மூலம் ஆட்களை சேர்ப்பதினை முழுவதுமாக கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். தொமுச உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பொதுமக்கள் நலனுக்காக போராட்டத்தினை கைவிட ஊழியர்களிடம் தொமுச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேருந்துகளை இயக்க ஊழியர்களிடம் பேசிவருவதாக தொமுச நடராஜன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.