இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம்
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று கொளத்தூர் பகுதியில் தனித்துவமான மென்லெஸ் டேக் அவே ஆர்டர் செய்து உணவை பெறும் மையத்தினை அமைத்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான பாய் வீட்டு கல்யாணம் அல்லது பிவிகே பிரியாணி உயர்தர சுவையில் நிலக்கரி மற்றும் விறகுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிரியாணியினை வழங்குகிறது என்று கூறப்படுகிறது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாப் ஷாப்பில் 32 அங்குல திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் மெனுக்களை பார்த்து உணவினை ஆர்டர் செய்யலாம். பின்னர் கியூ.ஆர்.குறியீடுகளை பயன்படுத்தி ஸ்கேன் செய்தோ, கார்டுகளை பயன்படுத்தியோ கட்டணத்தினை செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இது குறித்த தகவல்கள் அதிகளவில் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.