Page Loader
ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படியை உயர்த்தப் பரிசீலனை செய்யும் மத்திய அரசு
ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படியை உயர்த்தப் பரிசீலனை செய்யும் மத்திய அரசு

ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படியை உயர்த்தப் பரிசீலனை செய்யும் மத்திய அரசு

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 18, 2023
12:45 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை 4% வரை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது மத்திய அரசு. கடந்த மாதங்களில் பல்வேறு மாநிலங்கள் தங்களது மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்திருக்கின்றன. சமீபத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் தங்கள் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 38%-தத்தில் இருந்து 42% ஆக உயர்த்தி அறிவித்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்தே தற்போது மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியானது உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம்.

மத்திய அரசு

எப்போது வழங்கப்படும்? 

மத்திய அரசின் தரவுத்தளத்தின் படி, இந்தியாவில் 69.76 மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களும், 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் பணியில் இருக்கிறார்கள். முன்னதாக கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படியை 38%-தத்தில் இருந்து 42% ஆக உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. அப்போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதிய அகவிலைப்படி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்படும் பட்சத்தில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் 46% வரை அகவிலைப்படியும், அகவிலை நிவாரணமும் உயர்த்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.