மழைக்கால கூட்டத்தொடர் 2023 : ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், ஜூலை 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து களமிறங்குவதால், நடைபெறவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கி, பின்னர் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்டிடத்தை, கடந்த மே 28 அன்று மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தின் மொத்தம் மழைக்கால கூட்டத்தொடர் 23 நாட்களுக்கு, 17 அமர்வுகளாக நடத்தப்படும்.
மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள முக்கிய மசோதாக்கள்
இந்தியாவின் முதல் தனியுரிமைச் சட்டத்திற்கு வழி வகுக்கும், டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவின் வரைவுக்கு, மத்திய அரசு கடந்த புதன்கிழமை (ஜூலை 5) ஒப்புதல் அளித்தது. இந்த சட்டமுன்மொழிவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். இந்த சட்டத்தில், தனிப்பட்ட தரவைச் சேகரிப்பதற்கு முன், ஒப்புதல் மற்றும் தற்செயலான வெளிப்பாடுகள், பகிர்தல், மாற்றுதல் அல்லது தனிப்பட்ட தரவை அழித்தல் உள்ளிட்ட தரவு மீறல்களைத் தடுக்கத் தவறினால், ₹500 கோடி வரை அபராதம் விதிக்கிறது. முக்கியமாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணி நியமனம், பணி மாற்றம் போன்ற விவகாரங்களில் தலைநகர் டெல்லி நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு இந்த சட்டத்தை அமல்படுத்த திட்டம் தீட்டியுள்ளது.