Loading...
சிம் கார்டு வாங்குவதற்கான புதிய விதிகள்: மத்திய அரசு கடும் உத்தரவு!
புதிய சிம் கார்டுகள் வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்குவதற்கான புதிய விதிகள்: மத்திய அரசு கடும் உத்தரவு!

எழுதியவர் Venkatalakshmi V
Aug 19, 2026
05:58 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், போலி சிம் கார்டு மோசடிகள் மற்றும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' சம்பவங்களை தடுக்கும் நோக்கில், புதிய சிம் கார்டுகள் வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, சிம் கார்டு வாங்குபவர்களின் விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும். டிஜிட்டல் இன்டெலிஜென்ஸ் தளத்தின் உதவியுடன் பயனர்களின் பின்னணித் தகவல்கள் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே புதிய இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரம்பு

சிம் கார்டுகளின் எண்ணிக்கை வரம்பு

தனிநபர்கள் வைத்திருக்கக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையிலும் மத்திய அரசு தெளிவான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சாதாரணப் பகுதிகளில் வசிக்கும் ஒரு தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் வரை மட்டுமே வைத்திருக்க அனுமதி உண்டு.

எனினும், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும்.

போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டுகளைப் பெற்று மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகுந்த சரிபார்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT