Page Loader
குளிர்சாதன பெட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சிசிடிவி காட்சி
நிக்கியை காணவில்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததையடுத்து சாஹிலை போலீசார் தேடினர்.

குளிர்சாதன பெட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சிசிடிவி காட்சி

எழுதியவர் Sindhuja SM
Feb 15, 2023
06:49 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியின் நஜாப்கர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்சாதன அறைக்குள் 25 வயது நிக்கி யாதவ் என்ற பெண்ணின் சடலம் நேற்று(பிப் 14) கண்டெடுக்கப்பட்டது. உணவக உரிமையாளரான சாஹில் கஹ்லோட்டைக் கைது செய்த போலீஸார், அவர் சில நாட்களுக்கு முன், தன் காதலியைக் கொன்று, அவரது உடலை ஃப்ரீசருக்குள் மறைத்து வைத்ததாகக் கூறி இருந்தனர். இந்நிலையில், மரணமடைந்த பெண் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை தெளிவுபடுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. நிக்கி யாதவ் கடைசியாக தென்மேற்கு டெல்லியில் உள்ள தனது வாடகை வீட்டிற்குள் நுழைவது சிசிடிவி காட்சிகளில் தெரிகிறது. பிப்ரவரி 9 தேதி பதிவான இந்த வீடியோவில், அவர் தனியாக தான் இருக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

நிக்கி யாதவ் உயிரோடு இருந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள்