மாணவர்களின் திறனை வளர்க்க புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் CBSE
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கோடிங் பற்றி தெரிந்து கொள்வதும் ஒரு அடிப்படை திறனாக மாறி வருகிறது. அறிவியல், கணிதம், மொழி ஆகிய பாடங்களுடன் தற்போது கோடிங்கையும் ஒரு பாடமாக சிறிய வயதிலேயே மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது CBSE. செயற்கை நுண்ணறிவு, நிதி கல்வியறிவு, கோடிங், தகவல் அறிவியல், ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) மற்றும் மாஸ் மீடியா உள்ளிட்ட 33 வகையான திறன் சார்ந்த பாடங்கள் மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிட்டு வருகிறது CBSE. மாணவர்களின் எதிர்கால நலன் கருதியே இந்தத் திறன் சார்ந்த பாடத்திட்ட முறையை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்திருக்கிறது CBSE.
திறன் சார்ந்த பாடத்திட்டங்கள்:
இந்த வகையான பாடத்திட்டங்களில் 30% மட்டுமே தியரியாக கற்பிக்கப்பட வேண்டும் என்றும், 70% திறனை வளர்த்துக் கொள்ளும் வகையிலேயே இருக்க வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக பள்ளிகள் எந்தவொரு தனி கட்டணத்தையும் CBSE நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டங்களில் கோடிங்கிற்கிற்கான பாடங்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனமே வடிவமைக்கவிருக்கிறதாம். மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் கோட முகாம்கள், ஆக்டிவிட்டி பீரியட்கள் மற்றும் பையில்லா நாட்கள் ஆகியவற்றை பள்ளிகள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் CBSE நிர்வாகம் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.