சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு; டிஜிலாக்கர் மற்றும் UMANG செயலியில் பார்ப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அதிகாரப்பூர்வ இணையதளங்களான 'cbse.gov.in` மற்றும் `cbseresults.nic.in` ஆகியவற்றில் ஆகியவற்றில் நேரலையாக பார்க்கலாம். இருப்பினும், மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை DigiLocker மற்றும் UMANG செயலிகள் வாயிலாக இப்போதே பெற்றுக்கொள்ளலாம்.
செயல்முறை #1
டிஜிலாக்கர் (DigiLocker) மூலம் பார்ப்பது எப்படி?
மாணவர்கள் முதலில் தங்களது கணக்கை ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகள்: CBSE-ன் அதிகாரப்பூர்வ டிஜிலாக்கர் போர்ட்டலுக்குச் செல்லவும். "Get Started with Account Confirmation" என்பதை கிளிக் செய்யவும். உங்கள் வகுப்பு (Class X) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பள்ளிக் குறியீடு (School Code), ரோல் எண் (Roll Number) மற்றும் பள்ளியில் வழங்கப்பட்ட 6 இலக்க பாதுகாப்பு பின் (Security PIN) ஆகியவற்றை உள்ளிடவும். உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, வரும் OTP-ஐப் பதிவிடவும். இப்போது உங்கள் கணக்கு ஆக்டிவேட் ஆகிவிடும். உள்ளே சென்று மதிப்பெண் சான்றிதழைத் தரவிறக்கம் செய்யலாம்.
செயல்முறை #2
உமாங் (UMANG) செயலி மூலம் பார்ப்பது எப்படி?
1. ப்ளே ஸ்டோரில் (Play Store) இருந்து UMANG செயலியைத் தரவிறக்கம் செய்யவும். 2. உங்கள் விவரங்களை அளித்து கணக்கை உருவாக்கவும் (Sign up). 3. உள்நுழைந்த பிறகு (Log in), தேடல் கட்டத்தில் 'CBSE' என்று டைப் செய்யவும். 4. கேட்கப்படும் உங்கள் தேர்வு விவரங்களை (Roll number, School code) உள்ளிடவும். 5. 'Submit' பட்டனை அழுத்தினால், உங்கள் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும். 6. வருங்காலத் தேவைக்காக இதனை பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளவும்.