Page Loader
ஊழல் வழக்கு: ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு 
சுதிர் சௌத்ரி மீதான இரண்டு வழக்குகளும் போதிய ஆதாரம் இல்லாததால் மூடப்பட்டன.

ஊழல் வழக்கு: ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு 

எழுதியவர் Sindhuja SM
May 29, 2023
03:45 pm

செய்தி முன்னோட்டம்

ஆயுத வியாபாரி சுதிர் சௌத்ரி, அவரது மகன் பானு சௌத்ரி, பிரிட்டிஷ் நிறுவனங்களான ரோல்ஸ் ராய்ஸ் Plc, பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ், டிம் ஜோன்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் இந்தியா இயக்குநர் உட்பட பலர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) முறைகேடு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL)இன் 24 ஹாக், 115 அட்வான்ஸ் ஜெட் டிரெய்னர் விமானங்களை வாங்கியது மற்றும் 2003-2012க்கு இடையில் 42 கூடுதல் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான உரிமம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், அப்போதைய அரசு ஊழியர்களுடன் இணைந்து கிரிமினல் சதி செய்து விமானங்களை வழங்குவதற்கு தங்கள் அதிகாரப் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

details

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இருக்கும் வழக்குகள் 

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL)இன் 42 கூடுதல் விமானங்களைத் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் கூடுதல் தொகைக்கு(308.247 மில்லியன் டாலர்) உற்பத்தி செய்ய உரிமம் வழங்கிய குற்றம்சாட்டும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் குடிமகனும் ஆயுத வியாபாரியுமான சௌத்ரி, 2004ல் இஸ்ரேலை தளமாகக் கொண்ட பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து பீரங்கித் துப்பாக்கிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் அவரை விசாரித்தது. ஆனால், அந்த இரண்டு வழக்குகளும் போதிய ஆதாரம் இல்லாததால் மூடப்பட்டன. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 2018-2019ஆம் ஆண்டில் மூன்று அரசு நடத்தும் இந்திய நிறுவனங்களின் ஒப்பந்தங்களை பெற சந்தேகத்திற்குரிய பணம் செலுத்தியது தொடர்பான ஒரு தனி வழக்கில் விசாரிக்கப்பட்டது.