பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓட்டுநர் ஷர்மிளா, சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ரீல்ஸ் மூலம் பிரபலமடைந்தவர். இவர், கடந்த பிப்ரவரி 2ம் தேதி சத்திரோடு சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து எஸ்.ஐ. ராஜேஸ்வரி பணியில் இருந்து போது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அதனை எஸ்.ஐ. ராஜேஸ்வரி தட்டி கேட்டுள்ளார். இதனை, வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஷர்மிளா. இதனையடுத்து, பணிக்கு இடையூறு விளைவித்ததாகவும், அதை சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டதாகவும் ஷர்மிளாவிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பப்லிசிட்டிக்காக அவர் திமுக எம்பி கனிமொழியை பஸ்சில் ஏற்றி விவகாரத்தில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.