Page Loader
வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை
வீட்டில் தண்ணீர் கேனில் கஞ்சா செடி வளர்த்து வந்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை

எழுதியவர் Siranjeevi
Apr 20, 2023
03:41 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்க்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த கண்ணுசாமி என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர், வீட்டில் தண்ணீர் கேன் ஒன்றில் மண்ணை நிரப்பி செடி வளர்த்து வந்துள்ளார். இதுபற்றி வீட்டிலிருந்தவர்கள் கேட்டும் புளிச்ச கீரை செடி என சமாளித்துள்ளார். இதன்பின்னர், கண்ணுசாமி மகன் அதனை வீடியோவாக எடுத்து வீட்டில் கஞ்சா செடி வளர்க்கிறோம் என நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலாக தகவலறிந்து வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதன்பின் கண்ணுசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post