Page Loader
தமிழக அமைச்சரவையில் மாற்றமா?உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா?
நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததும், அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது

தமிழக அமைச்சரவையில் மாற்றமா?உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா?

எழுதியவர் Venkatalakshmi V
May 22, 2024
05:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவர முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததும், அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. எனினும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல், துறை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட இருப்பதாகவும், உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தல் பணிகளை சரிவர செய்யாத அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலும் வருகிறது.இது பற்றி ஆசியாநெட் வெளியிட்டுள்ள செய்திப்படி, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உடல்நலம் காரணமாகவும் செயல்பாடுகளாலும் அமைச்சரவையில் இருந்து மாற்றப்படலாம் என்று திமுக வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

embed

Twitter Post

மேலும் படிக்க : https://t.co/DIAc3WaIK8#TNMinisters #DMK #MKStalin #TNCabinet #Tamilnadunews #MMNews #Maalaimalar pic.twitter.com/i38MzXBsP5— Maalai Malar தமிழ் (@maalaimalar) May 22, 2024