Loading...
₹84,000 கோடியில் மாபெரும் திட்டம்! ஆழ்கடல் கச்சா எண்ணெய் ஆராய்ச்சிக்காக சமுத்திர மந்தன்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ரூ.84,000 கோடியில் ஆழ்கடல் எண்ணெய் ஆராய்ச்சி திட்டம்

₹84,000 கோடியில் மாபெரும் திட்டம்! ஆழ்கடல் கச்சா எண்ணெய் ஆராய்ச்சிக்காக சமுத்திர மந்தன்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 01, 2026
07:39 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அமைச்சரவை இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் ₹84,084 கோடி மதிப்பிலான சமுத்திர மந்தன் என்ற தேசிய கடல்சார் ஆராய்ச்சித் திட்டத்திற்கு தற்போது முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் அறிவித்தார். 2030-31 ஆம் நிதியாண்டு வரை செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம், இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதுடன் வெளிநாட்டு இறக்குமதி சுமையைக் கணிசமாகக் குறைக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது.

ஆராய்ச்சி

ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் நவீன உள்கட்டமைப்பு

இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் ஆழ்கடல் மற்றும் மிக ஆழ்கடல் பகுதிகளில் பெருமளவில் ஹைட்ரோகார்பன் வளங்கள் நிறைந்துள்ளன.

இந்த இயற்கை ஆதாரங்களை நவீன தொழில் நுட்பங்கள் மூலம் துல்லியமாக ஆய்வு செய்து தோண்டி எடுப்பதன் மூலம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையைப் பெருமளவில் பூர்த்தி செய்ய முடியும்.

இத்திட்டம் ஆழ்கடலில் அதிநவீன நில அதிர்வுத் தரவு சேகரிப்பு, புதிய பகுதிகளைக் கண்டறிதல் மற்றும் ஆய்வுக் கிணறுகள் தோண்டுதல் போன்ற பணிகளைத் தீவிரப்படுத்தும்.

மேலும் விண்வெளி மற்றும் கடல்சார் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விரிவான உற்பத்தி உள்கட்டமைப்புகளையும் உருவாக்கித் தர இத்திட்டம் வழிவகை செய்கிறது.

வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்புகள்

சமுத்திர மந்தன் திட்டம் மூலம் சுமார் 600 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் மதிப்பிலான கூடுதல் வளங்கள் கண்டறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை உயர்த்தி, ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அந்நியச் செலாவணியைச் மிச்சப்படுத்த பெரிதும் உதவும்.

மேலும் இத்துறையில் பெருமளவிலான புதிய முதலீடுகளை ஈர்ப்பதுடன் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

ஒருங்கிணைந்த எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி சேவை மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் நாட்டின் உற்பத்தித் திறன் பெருமளவில் மேம்படும்.

ஆத்மநிர்பர் பாரத் மற்றும் மேக் இன் இந்தியா ஆகிய கனவுகளை நனவாக்க இத்திட்டம் மிகப்பெரிய தூணாக விளங்கும்.

ADVERTISEMENT