
பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்!
செய்தி முன்னோட்டம்
பெங்களூர் கன்னிங்ஹோம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க கோரி மக்கள் வலியுறுத்திய நிலையில், பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தால், ரூ.10 லட்சம் மதிப்புடைய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அமைக்கப்பட்ட ஒரே வாரத்தில், அது காணாமல் போனது.
அரசு அதிகாரிகள் ஏதேனும் காரணத்திற்காக இதனை அகற்றியிருப்பார்கள் என்று மக்கள் கருதியுள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் இந்த ரூ.10 லட்சம் மதிக்கத்தக்க நிழற்குடை மாயமானதை கண்டு, பராமரிக்க வந்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் தங்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்த மேலதிகாரிகள், நிழற்குடை திருட்டு குறித்து காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர்.
நிழற்குடை திருடப்பட்டு, ஒருமாதம் கழித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையினை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
நிழற்குடை மாயம்
#JUSTIN || விதான் சவுதா அருகேயுள்ள
— Thanthi TV (@ThanthiTV) October 6, 2023
கன்னிங்ஹாம் பேருந்து நிறுத்தம் மாயம்
10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த
நிழற்குடை காணாமல் போனது
குறித்து போலீசார் விசாரணை#vidhanchoudha #bengaluru #busstand pic.twitter.com/Po3V8SI4Dg