Page Loader
அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு - தமிழக அரசு தகவல்
அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு - தமிழக அரசு தகவல்

அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு - தமிழக அரசு தகவல்

எழுதியவர் Nivetha P
Oct 13, 2023
02:37 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்தாண்டு செப்.,15ம் தேதி முதற்கட்டமாக 1543 அரசு பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட்.,25ம் தேதி அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையான மாணவ-மாணவியர்களுக்கு இந்த காலை உணவு திட்டத்தினை விரிவுபடுத்தினார். இதன் மூலம் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடலோரப்பகுதிகளில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் இந்த காலை உணவு திட்டத்தினை செயல்படுத்த கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

விசாரணை 

பொதுநல வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம் 

அந்த பொதுநல வழக்கு மீதான விசாரணை இன்று(அக்.,13) நடந்த நிலையில், காலை உணவு திட்டத்தினை அரசு பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. மேலும், 'அதுமட்டுமின்றி நிதிநிலை அறிக்கையினை பொறுத்து இந்த காலை உணவு திட்டம் விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது' என்றும் கூறப்பட்டதாக என்று தெரிகிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் இந்த பதிலை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த பொதுநல வழக்கை முடித்து வைத்தது.