NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிப்பு 

    விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 02, 2024
    05:03 pm

    செய்தி முன்னோட்டம்

    பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் கையால் எழுதப்பட்டதை வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மும்பை விமான நிலையத்தில் இன்று முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

    இன்று காலை 10:08 மணிக்கு ஒரு ஏர்சிக்னெஸ் பையில் மிரட்டல் குறிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று விமான குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும், 294 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் விமானம் 10:19 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    "ஜூன் 2, 2024 அன்று பாரிஸிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த விஸ்டாரா விமானத்தில் பாதுகாப்புக் கவலை எழுந்தது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்." என்று விஸ்டாரா ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    இந்தியா 

    இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவல் 

    "நெறிமுறையைப் பின்பற்றி, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. மேலும் அனைத்து கட்டாய சோதனைகளுக்கும் நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களுடன் முழுமையாக ஒத்துழைக்க உள்ளோம்."என்று விஸ்டாரா செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.

    வாரணாசியில் இருந்து புது டெல்லிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று தகவல் கிடைத்ததை அடுத்து அதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது

    ஆனால், அந்த விமானத்தில் நடந்த சோதனைக்கு பிறகு அது பொய் என்பது தெரியவந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மும்பை
    வெடிகுண்டு மிரட்டல்

    சமீபத்திய

    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு

    இந்தியா

    இந்தியாவில் மஹிந்திரா XUV 3XOக்கான முன்பதிவு தொடங்கியது  மஹிந்திரா
    இந்தியாவில் அதிகரித்து வரும் லம்போர்கினியின் டிமாண்ட்: 200 ஆர்டர்கள் வைட்டிங்கில் உள்ளது லம்போர்கினி
    கிர்கிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் எச்சரிக்கை  பாகிஸ்தான்
    ஹரியானா மாநிலம் நூஹில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்து: 9 பேர் பலி, 13 பேர் காயம் ஹரியானா

    மும்பை

    க்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது  க்ரைம் ஸ்டோரி
    மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் கொலை
    சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஜினிகாந்த்
    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா

    வெடிகுண்டு மிரட்டல்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை தமிழக காவல்துறை
    மீண்டும் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை தலைமை செயலகத்திற்கு! சென்னை
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் சென்னை
    பெங்களூரு பள்ளி அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு  பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025