ராமேஸ்வரம் அருகே வெடிகுண்டு புதைத்து வைத்திருப்பதாக தகவல் - நிபுணர்கள் சோதனை
ராமேஸ்வரம் மாவட்டம் அருகேயுள்ள கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலில் ராமேஸ்வரம் அடுத்துள்ள அக்காள்மடம் கடற்கரையோரம் உள்ள காட்டுப்பகுதியில் வெடிகுண்டுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் எஸ்பி தனிப்பிரிவு போலீசார், கியூ பிரிவு, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவே தேடுதல் நடந்து வருகிறது. இந்த சோதனையில் சென்னையில் இருந்து சென்றுள்ள சிறப்பு வெடிகுண்டு சோதனை மற்றும் தடுப்புப்பிரிவினரும், அம்மாவட்ட காவல் சிறப்பு படையினர் மற்றும் சிறப்பு புலனாய்வு துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கரையோரத்தில் உள்ள மணல் பகுதிகளிலும், பனங்காடுகளிலும் வெடிகுண்டுகள் உள்ளதா? என்று தேடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Twitter Post
#JUSTIN | ராமேஸ்வரம் அருகே வெடிகுண்டு புதையல்? #Rameswaram pic.twitter.com/LVdXcdLiVY— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) May 3, 2023