பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்திக்கு தடை
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகர்கோயிலில் தைப்பூசம்,கந்தசஷ்டி,நவராத்திரி திருவிழா,பங்குனி உத்திரம் போன்ற பாரம்பரிய திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் போகர்ஜெயந்தியும் இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த விழாவானது வரும் 18ம்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. பழனி முருகர் கோயிலில் போகர்சித்தரின் பிறந்தநாளன்று அங்கு அமைந்துள்ள போகர் சன்னதியில் திருக்கோயில் சொத்துக்களான மரகதலிங்கம்,புவனேஸ்வரி அம்மன் போன்ற விலையுயர்ந்த விக்கிரகங்கள் சன்னதிப்பூசாரியின் சுவாதீனத்தில் ஒப்படைத்து பூஜை செய்துத்தர அனுமதியுள்ளது. ஆனால் பூசாரிகள் பணிக்கான விதிகளைமீறி திருக்கோயில் பழக்கவழக்கங்களுக்கு எதிராக திருவிழா நடத்த ஏற்பாடு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் மலைக்கோயில் போகர் சன்னதியில் போகர்ஜெயந்திக்கான திருவிழா ஏதும் நடத்தக்கூடாது என்று கோயில் நிர்வாக இணைஆணையர் நடராஜன் தடைவிதித்து ஆணை பிறப்பித்துள்ளார்.