Page Loader
நடிகை குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம்
தேசிய மகளிர் ஆணையத்தின்(NCW) உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்பூ

நடிகை குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம்

எழுதியவர் Sindhuja SM
Feb 27, 2023
06:39 pm

செய்தி முன்னோட்டம்

நடிகரும் பாஜக தலைவருமான குஷ்பூ சுந்தர் தேசிய மகளிர் ஆணையத்தின்(NCW) உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ, தனது நியமனம் குறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அவருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது இந்த நியமனம் பெண்களின் உரிமைகளுக்கு அவர் போராடியதற்கான அங்கீகாரம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். "இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி." என்று பிரதமருக்கு குஷ்பூ நன்றி தெரிவித்திருக்கிறார்.

இந்தியா

குஷ்பூவின் அரசியல் பயணம்

மேலும் அவர், "உங்கள் தலைமையின் கீழ் வேகமாக வளர்ந்து வரும் பெண்கள் சக்தியைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் கடுமையாகப் பாடுபடுவேன். " என்றும் ட்விட்டரில் கூறியுள்ளார். திரைப்பட தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்த நடிகை குஷ்பூ, ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து, பின் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அவர் அதன்பின், பாஜகவுக்கு மாறி 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் குஷ்பூவை தோற்கடித்து திமுகவின் என்.எழிலன் வெற்றி அடைந்தார். தற்போது, குஷ்பூ மேலும் இருவருடன் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.