2023-24 நிதியாண்டில் தேசிய கட்சிகளில் அதிக வருமானம் ஈட்டிய பாஜக; ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
2023-24 நிதியாண்டில் தேசிய கட்சிகளில் பாஜக அதிக வருமானத்தை ஈட்டியதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கையின்படி தெரிய வந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி மேலே குறிப்பிட்ட நிதியாண்டில் பாஜகவின் மொத்த வருவாய் ₹4,340.47 கோடியாக உள்ளது.
ஆறு தேசிய கட்சிகள் ஈட்டிய மொத்த வருவாயில் பாஜகவின் வருமானம் மட்டும் 74.57% ஆகும்.
அதன் குறிப்பிடத்தக்க வருவாய் இருந்தபோதிலும், பாஜக அதன் வருவாயில் 50.96%, அதாவது ₹2,211.69 கோடி மட்டுமே செலவிட்டது.
இதற்கு நேர்மாறாக, காங்கிரஸ் ₹1,225.12 கோடி வருவாய் ஈட்டியதாகவும், அதில் 83.69%, அதாவது ₹1,025.25 கோடி செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திர நன்கொடைகள்
தேசிய கட்சிகளின் வருவாயில் பெரும்பகுதி தேர்தல் பத்திர நன்கொடைகளிலிருந்து வந்தது. இந்த முறையில் பாஜக ₹1,685.63 கோடியைப் பெற்றது.
அதே நேரத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி முறையே ₹828.36 கோடி மற்றும் ₹10.15 கோடியைப் பெற்றன.
மொத்தத்தில், இந்த மூன்று கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹2,524.14 கோடியை திரட்டின.
எனினும், மே 2023 இல் உச்ச நீதிமன்றம் இந்த தேர்தல் பத்திர திட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தரவுகளின்படி, 2023-24 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் ₹4,507.56 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளன.
இதில் தேசிய கட்சிகள் 55.99% பங்கை கொண்டுள்ளன.