சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - 9 தனிப்படைகள் அமைப்பு
செய்தி முன்னோட்டம்
பாஜக'வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் மாநில பொருளாளராக பதவி வகித்தவர் பிபிஜி சங்கர். வளர்புர ஊராட்சி மன்ற தலைவராகவும் அவர் உள்ளார்.
இந்நிலையில் நேற்று(ஏப்ரல்.,27) இரவு சென்னை கொளத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்னர் மீண்டும் வளர்புரம் நோக்கி செல்கையில் பூந்தமல்லி அருகே சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ்சாலை நஸ்ரத்பேட்டை சந்திப்பில் கார் சிக்னலில் நின்றபொழுது அவரது காரினை பின்தொடர்ந்து வந்த 2 காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென 3 நாட்டுவெடிகுண்டுகளை காரின் மீது சரமாரியாக வீசியுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிபிஜி சங்கர் உடனடியாக காரினை விட்டு இறங்கி தப்பியோட முயற்சித்தார்.
சாலையின் மறுபக்கம் சென்று தப்பி செல்ல முயன்ற அவரை விடாமல் அந்த மர்ம கும்பலும் பின்தொடர்ந்து துரத்தி சென்றது.
பாஜக
செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து விசாரணை
பின்னர் பிபிஜி சங்கரை சுற்றிவளைத்த அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது.
பிபிஜி சங்கரை வெட்ட முயற்சித்தப்பொழுது அவரும் அவர்களுக்கு எதிராக கத்தியினை வீசி எதிர்தாக்குதல் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
எனினும் அவரால் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்துள்ளார்.
மீண்டும் அந்த கும்பல் அந்த இடத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது.
இதனைதொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆவடி காவல்ஆணையராக இணைஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சுமார் 9 தனிப்படைகள் அமைத்து அந்த மர்மகும்பலினை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
சங்கருக்கு வந்த செல்போன் அழைப்புகள், சம்பவ இடத்தில் கிடைத்த செல்போனில் உள்ள அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் என பல கோணத்தில் போலீசார் தங்கள் விசாரணையினை நடத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை.