இந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி அந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த 16ம் தேதி 60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
அதே போல் தலா 60 தொகுதிகளை கொண்ட நாகலாந்து, மேகாலயா மாநிலங்களிலும் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த மாநிலங்களின் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று(மார்ச்.,2) காலை 8 மணிக்கு எண்ண துவங்கப்பட்டுள்ளது.
இதன் முன்னிலை விவரங்களும் தற்போது வெளியாகி வருகிறது.
மேகாலயாவில் பெரும்பான்மை
நாகலாந்தை தொடர்ந்து திரிபுராவிலும் பாஜக முன்னிலை
இந்நிலையில் நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் முடிவில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
பாஜக கூட்டணி 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் மீண்டும் பாஜக கூட்டணி தான் அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, நாமுக 4 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் மற்றவை 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
திரிபுராவிலும் பாஜக முன்னிலை பெற்று வருவதால் அங்கும் பாஜக'வின் வெற்றி உறுதியாகியுள்ளது.
மேகாலயாவில் ஆளும் தேசிய கட்சியுடன் கூட்டணியில் இருந்த பாஜக தற்போதைய தேர்தலில் கூட்டணியை முறியடித்து தனித்து களம்கண்டுள்ளது.
காங்கிரசும் அங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதன்படி, மேகாலயாவில் இதுவரை எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.