அமேசான் பார்சலுக்குள் இருந்த நாகப்பாம்பு: பெங்களூரு தம்பதியினருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களுக்கு வந்த அமேசான் ஆர்டர் பொட்டலத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு பெங்களூரில் ஒரு தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர். மென்பொருள் பொறியாளர்களான அந்த தம்பதியினர், ஆன்லைனில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்திருந்தனர். ஆனால் அவர்களது பேக்கேஜுக்குள் ஒரு கண்கவர் நாகப்பாம்பு இருப்பதைக் கண்டதும் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகிவிட்டது. அந்த விஷப் பாம்பு அதிர்ஷ்டவசமாக பேக்கேஜிங் டேப்பில் சிக்கியதால். அதனால் வெளியே வந்து எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்நிலையில், அந்த தம்பதியினர் சமபவத்தின் போது பதிவு செய்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
சம்பவத்தை சமூக வாலித்தலங்களில் பகிர்ந்த வாடிக்கையாளர்
"நாங்கள் 2 நாட்களுக்கு முன்பு அமேசானில் இருந்து ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தோம். இந்நிலையில், அந்த பேக்கேஜில் ஒரு பாம்பு இருந்தது. பேக்கேஜ் நேரடியாக எங்களிடம் டெலிவரி பார்ட்னரால் ஒப்படைக்கப்பட்டதாகும். அதை நாங்கள் வெளியே எங்கும் வைக்கவில்லை. நாங்கள் சர்ஜாபூர் சாலையில் வசிக்கிறோம். மேலும் இந்த முழு சம்பவத்தையும் நாங்கள் கேமராவில் பதிவு செய்துள்ளோம். இதை நேரில் கண்ட சாட்சிகளும் எங்களிடம் உள்ளன" என்று அந்த வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார். "அதிர்ஷ்டவசமாக, அந்த பாம்பு பேக்கேஜிங் டேப்பில் மாட்டிக்கொண்டது. அதனால், எங்கள் வீட்டிலும் குடியிருப்பிலும் உள்ள யாருக்கும் அது தீங்கு விளைவிக்கவில்லை." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.