NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே நாளில் அதிக மழை பெய்தால் 133 ஆண்டுகால சாதனையை முறியடித்தது பெங்களூரு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே நாளில் அதிக மழை பெய்தால் 133 ஆண்டுகால சாதனையை முறியடித்தது பெங்களூரு 

    ஒரே நாளில் அதிக மழை பெய்தால் 133 ஆண்டுகால சாதனையை முறியடித்தது பெங்களூரு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 03, 2024
    04:28 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று பெங்களூரில் வரலாறு காணாத மழை பெய்தது.

    நேற்று ஒரே நாளில் அதிக மழை பெய்ததால் 133 ஆண்டுகால சாதனையை பெங்களூரு முறியடித்துள்ளது.

    கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியவுடன் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், ஜூன் 2ஆம் தேதி கர்நாடக தலைநகரில் 111.1 மிமீ மழை பதிவாகியது.

    ஜூன் 16, 1891 அன்று பெங்களூரில் 101.6 மிமீ மழை பதிவாகியது. 133 ஆண்டுகளுக்கு முன் பதிவான அந்த வரலாற்று சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 3 முதல் 5 வரை பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்தியா 

    பெங்களூருவின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

    ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கூடுதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த காலகட்டத்தில், வெப்பநிலை அதிகபட்சமாக 31-32 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சமாக 20-21 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

    நேற்று பெய்த கனமழையால் பெங்களூருவின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இதனால் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இடையூறுகள் மற்றும் மெட்ரோ சேவைகள் பாதிக்கப்பட்டன.

    ஹெப்பால் அண்டர்பாஸ், கேஎப்சி ரோடு முதல் குஞ்சூர் ரோடு, சிக்கஜாலா கோட் கிராஸ், பென்னிகனஹள்ளி ரயில்வே பாலம், ஹெப்பல் சர்க்கிள் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா

    பெங்களூர்

    4 வயது மகனை கொன்ற வழக்கு: பிரிந்த கணவரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார் பெங்களூரு சிஇஓ கோவா
    மகனைக் கொல்வதற்கு முன் கணவருக்கு மெசேஜ் அனுப்பிய சுசனா சேத் கோவா
    பெங்களுரு சிஇஓ தனது 4 வயது மகனை கொல்வதற்கு முன்பு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது கர்நாடகா
    மகனின் கொலை தொடர்பாக, பெங்களூரு தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்-ஐ சந்தித்த கணவர் வெங்கட்ராமன்  கொலை

    வானிலை ஆய்வு மையம்

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்
    அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கேரளா
    தமிழகத்தில் சதமடித்த வெயில்; அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் தமிழகம்
    பொதுமக்களே உஷார்..! மே.6 வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025