Page Loader
தும்பிக்கை இழந்த யானை குட்டியால் மக்கள் சோகம்
யானை குட்டி கண்டுபிடிக்கபட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது

தும்பிக்கை இழந்த யானை குட்டியால் மக்கள் சோகம்

எழுதியவர் Sindhuja SM
Jan 12, 2023
06:00 pm

செய்தி முன்னோட்டம்

கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த யானை குட்டி அதன் கூட்டத்துடன் அரசிற்கு சொந்தமான ஒரு எஸ்டேட்டில் சுற்றி வரும் போது அப்பகுதி மக்களின் கண்களில் பட்டிருக்கிறது. இதை அவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஆனால், யானை குட்டி இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை என்றும், அதை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த யானைக்கு எதனால் தும்பிக்கை துண்டிக்கப்பட்டிருக்கும் என்பதையும் வனத்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த யானை குட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பொதுவாக, யானைக்கு தும்பிக்கை இல்லையென்றால் தானாக தண்ணீர் அருந்தவோ உணவு உட்கொள்ளவோ முடியாது. அதனால், செய்தி அறிந்த இணையவாசிகள் சோகத்தில் இருக்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

தும்பிக்கை இல்லாத யானை குட்டியின் வீடியோ: