அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு பெயர் வைக்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
அயோத்தி ராமர் கோவிலில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு 'பாலக் ராம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஐந்து வயது பாலகனாக பகவான் ராமர் அருள்புரிவதால் அந்த சிலைக்கு 'பாலக் ராம்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
"ஜனவரி 22 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ராமர் சிலைக்கு 'பாலக் ராம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அவர் ஐந்து வயது குழந்தையைப் போல காட்சியளிப்பதனால், ராமர் சிலைக்கு 'பாலக் ராம்' என்று பெயர் சூட்டப்பட்டது." என்று கும்பாபிஷேக விழாவுடன் தொடர்புடைய பூசாரி அருண் தீட்சித் கூறியுள்ளார்.
"அந்த சிலையை முதன்முதலாகப் பார்த்தபோது, நான் சிலிர்த்துப் போனேன். என் முகத்தில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அப்போது நான் அனுபவித்த உணர்வை என்னால் விளக்க முடியாது," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ட்ஜ்வ்க்க்
நேற்று நடந்த பிரம்மாண்ட கும்பாபிஷேக விழா
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு, நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான அரசியல்வாதிகளும் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
அயோத்தி ராமர் கோவிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தலைமை தாங்கினார்.
அதன் பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராமர் இனி ஒரு கூடாரத்தில் வாசம் செய்யமாட்டார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
மேலும், "பல தலைமுறை காத்திருப்புக்குப் பிறகு இன்று நம் ராமர் திரும்பிவிட்டார். இந்த இனிய சந்தர்ப்பத்தில், அனைவருக்கும் வாழ்த்துகள்" என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.