
பள்ளி குழந்தைகளோடு சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து; வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள சங்கம் சரத் திரையரங்கம் அருகில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
சாலை சந்திப்பில் லாரி வருவதை கண்ட ஆட்டோ ஓட்டுநர், அதன்மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்துள்ளார்.
எனினும், ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை மீறி, லாரி மீது மோதி, தலைகுப்புற கவிழ்ந்தது.
இவ்விபத்தில் ஆட்டோக்குள் இருந்த பள்ளி குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
8 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில், 4 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
3 பேர் சிகிச்சைப்பெறும் நிலையில், ஒரு குழந்தை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த விபத்து குறித்து காவல்துறை தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
பதபதைக்க வைக்கும் வீடியோ பதிவு
CCTV Footage Realesed | Tragic accident in Andhra Pradesh: Eight students injured as their auto collides with a lorry near Sangam Sarat Theatre in Visakhapatnam. The injured have been promptly shifted to the hospital.#Visakhapatnam #Accident #AndhraPradesh pic.twitter.com/24GfqcEFzQ
— Informed Alerts (@InformedAlerts) November 22, 2023