NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியின் இளம் வயது முதல்வராக அதிஷி பதவியேற்பு; அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியின் இளம் வயது முதல்வராக அதிஷி பதவியேற்பு; அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம்
    டெல்லியின் இளம் வயது முதல்வராக பதவியேற்றார் அதிஷி

    டெல்லியின் இளம் வயது முதல்வராக அதிஷி பதவியேற்பு; அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    05:56 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்றார்.

    முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வார தொடக்கத்தில் ராஜினாமா செய்தார். அதிஷி தலைமையில் புதுப்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி அமைச்சர்கள் குழுவில் சுல்தான்பூர் மஜ்ரா எம்எல்ஏ முகேஷ் அஹ்லாவத், கோபால் ராய், கைலாஷ் கெலோட், சவுரப் பரத்வாஜ் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

    முதல்வராக பதவியேற்றதன் மூலம், அதிஷி இந்தப் பதவியை வகிக்கும் மூன்றாவது பெண் என்ற பெருமையை பெற்றதோடு, 43 வயதில் டெல்லியின் இளைய முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும், டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதிஷி அரசின் பதவிக்காலம் குறுகியதாக இருக்கும்.

    புதிய அமைச்சரவை

    பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக கெஜ்ரிவாலை சந்தித்த அதிஷி அமைச்சரவை

    சுல்தான்பூர் மஜ்ராவிலிருந்து முதல் முறையாக எம்எல்ஏவான முகேஷ் அஹ்லாவத் மட்டும் அவரது அமைச்சரவையில் புதிய முகமாகும்.

    முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன், அதிஷி தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களுடன் கெஜ்ரிவாலை சந்தித்தார்.

    முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் ராஜினாமா செய்ததால் ஆம் ஆத்மி கட்சிக்குள் சோகமான சூழல் நிலவுவதால், பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடக்கும் எனத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதிஷியை பொறுத்தவரை, கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அவர், நிதி, கல்வி, வருவாய் உள்ளிட்ட 14 முக்கிய இலாகாக்களை நிர்வகித்து, கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது ஆட்சியை பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    முதல் அமைச்சர்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    டெல்லி

    நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை  இந்தியா
    உத்தரபிரதேசத்தில் வேகமாக வந்த பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழப்பு விபத்து
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி, நொய்டாவில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஹரியானா

    ஆம் ஆத்மி

    மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது சம்மன் அனுப்பியது அமலாக்க இயக்குநரகம்  டெல்லி
    டெல்லி ஜல் போர்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனை புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம்  டெல்லி
    "மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி அரவிந்த் கெஜ்ரிவால்

    முதல் அமைச்சர்

    பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பா?  பொன்முடி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அரவிந்த் கெஜ்ரிவால்
    திஹார் ஜெயிலில் டெல்லி முதல்வரின் முதல் நாள் எப்படி கழிந்தது? அரவிந்த் கெஜ்ரிவால்
    கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி கோவை

    இந்தியா

    நிலத்தடி நீர்மட்ட இழப்பை சரிக்கட்ட மாற்று பயிரிடுதல் தான் சரியான வழி; ஐஐடி ஆய்வில் தகவல் ஐஐடி
    2026-27 நிதியாண்டில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 13% ஆக உயரும் என கணிப்பு இரு சக்கர வாகனம்
    அடுத்த 4-5 ஆண்டுகளில் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு ஆர்பிஐ
    ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த குழு அமைக்க மத்திய அரசு பரிசீலனை மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025