
காலை 9 மணி வரை சிக்கிமில் 7.90%, அருணாச்சலத்தில் 6.44% வாக்குகள் பதிவு
செய்தி முன்னோட்டம்
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளுக்கும் இன்றுகாலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
முதல்வர்கள் பெமா காண்டு(அருணாச்சல பிரதேசம்) மற்றும் பிரேம் சிங் தமாங்(சிக்கிம்) ஆகியோர் ஆரம்ப கட்ட வாக்குபதிவில் கலந்துகொண்டு வாக்களித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, காலை 9 மணி வரை சிக்கிமில் தோராயமாக 7.90 சதவீத வாக்குகளும், அருணாச்சல பிரதேசத்தில் தோராயமாக 6.44 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அருணாச்சலத்தில், 4,54,256 பெண்கள் உட்பட 8,92,694 வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி, இன்று வாக்களித்து வருகின்றனர்.
அருணாச்சல்
சிக்கிமில் 4.64 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
இன்று அருணாச்சல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 133 வேட்பாளர்கள் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் விதியை வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
சிக்கிமில், 4.64 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
சிக்கிம் மாநிலத்திலிருந்து மக்களவைக்கு ஒரு எம்.பி.யையும், சட்டமன்ற பிரதிநிதிகளையும் சிக்கிம் மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் பாஜக ஏற்கனவே 10 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு நாடாளுமன்றத் தொகுதியில், மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாநில காங்கிரஸ் தலைவர் நபம் துகி உட்பட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.