Loading...
காவல்துறை காரில் இருந்து குதித்து அதிர்ச்சி மரணம்! மனைவியின் தலையைத் துண்டித்து ஃபிரிட்ஜில் வைத்த கொடூரன்; அசாமில் பரபரப்பு
மனைவியைக் கொன்ற வழக்கில் கைதான அசாம் நபர் மரணம்

காவல்துறை காரில் இருந்து குதித்து அதிர்ச்சி மரணம்! மனைவியின் தலையைத் துண்டித்து ஃபிரிட்ஜில் வைத்த கொடூரன்; அசாமில் பரபரப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2026
06:27 pm

செய்தி முன்னோட்டம்

அசாம் மாநிலம் கௌஹாத்தியில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்து, அவரது துண்டிக்கப்பட்ட தலையை ஃபிரிட்ஜில் வைத்த வழக்கில் கைதான ராமானுஜ் கோஸ்வாமி (30) என்ற நபர், நகரும் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து உயிரிழந்தார். கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை முடிந்து, ஹாடிகாவ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது இச்சம்பவம் நடந்துள்ளது. நரகசுரன் பஹார் பகுதியில் வாகனம் சென்றுகொண்டிருந்த போது, பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிவிட்டு அவர் வெளியே குதித்துள்ளார்.

மருத்துவமனையில் பலி

பள்ளத்தில் விழுந்து படுகாயம்

வாகனத்தில் இருந்து குதித்த கோஸ்வாமி, அருகில் இருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவரை காவல்துறையினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

செப்டம்பர் 3 ஆம் தேதி தனது மனைவி ரியா தாலுக்தார் (25) என்பவரை கள்ளக்காதல் சந்தேகத்தின் பேரில் கொடூரமாக கொலை செய்ததாக கோஸ்வாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஃபிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட தலை

கொடூரக் கொலையின் பின்னணி

தம்பதியரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டார் அளித்த புகாரின் பேரில் சோதனை செய்த காவல்துறையினர், ஃபிரிட்ஜிற்குள் கருப்பு பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த மனைவியின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் விரல்களைக் கண்டெடுத்தனர்.

இதையடுத்து செப்டம்பர் 6 ஆம் தேதி சரணடைந்த கோஸ்வாமி மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகள் 103(1) மற்றும் 238ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 7 நாட்கள் காவல்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வந்தார்.

ADVERTISEMENT

விசாரணை

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

விசாரணையின் போது கொலை செய்ததற்காக எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லை எனக் கூறிய கோஸ்வாமி, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரத்தம் தோய்ந்த அரிவாளையும் காவல்துறையினரிடம் காட்டிக் கொடுத்துள்ளார்.

மதுபோதையில் இக்கொலையை செய்ததாக அவர் ஒப்புக்கொண்ட நிலையில், அவரிடம் இருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அவருக்கு போதைப்பொருள் பழக்கம் மற்றும் நிதி மோசடி வழக்குகள் இருந்ததாகப் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது அவர் காவல்துறை காவலில் உயிரிழந்தது தொடர்பாக தனியாக விசாரணை நடத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT