Page Loader
பலதார மணத்தை தடை செய்ய நடவடிக்கை: நிபுணர் குழுவை அமைத்தது அசாம்
பலதார மணத்தை தடைசெய்வது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க 60 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

பலதார மணத்தை தடை செய்ய நடவடிக்கை: நிபுணர் குழுவை அமைத்தது அசாம்

எழுதியவர் Sindhuja SM
May 12, 2023
05:28 pm

செய்தி முன்னோட்டம்

அசாம் மாநிலத்தில் பலதார மணத்தை(Polygamy) தடைசெய்வதற்கு சட்டம் இயற்ற முடியுமா என்பதை ஆராய நான்கு பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். நீதிபதி(ஓய்வு) ரூமி பூகன் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பலதார மணத்தை தடைசெய்வது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க 60 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அசாம் மாநில அரசு அமைத்த குழுவில் பின் வரும் நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்: 1. நீதிபதி(ஓய்வு) ரூமி பூகன் 2. அட்வகேட் ஜெனரல் தேபாஜித் சைகியா 3. கூடுதல் அட்வகேட் ஜெனரல் நலின் கோஹ்லி 4. வழக்கறிஞர் நெகிபுர் ஜமான்

details

முஸ்லீம் தனிநபர் சட்டத்தில்(ஷரியத்) இதற்கு இடம் இருக்குமா?

இந்த குழு, முஸ்லீம் தனிநபர் சட்டம்(ஷரியத்), 1937 மற்றும் அரசியலமைப்பின் 25வது சட்டப்பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்யும் என்று செவ்வாய்க்கிழமை ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி இருந்தார். சட்டப்பிரிவு-25, அனைத்து குடிமக்களுக்கும் மனசாட்சியின் சுதந்திரம், மதத்தை கூறுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் சுதந்திரம் அளிக்கிறது. திருமணம் மற்றும் பரம்பரை தொடர்பான தனிப்பட்ட சட்டங்கள் மிக முக்கியமானவை என்பதால் அவற்றைத் திருத்தவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என்று வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர். பலதார மணத்தை தடை செய்யும் திட்டம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது அல்ல என்று சர்மா வலியுறுத்தியுள்ளார். எனினும், எதிர்கட்சிகள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.