Page Loader
ED காவலில் இருந்து கொண்டே தனது முதல் உத்தரவை பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 

ED காவலில் இருந்து கொண்டே தனது முதல் உத்தரவை பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 

எழுதியவர் Sindhuja SM
Mar 24, 2024
09:50 am

செய்தி முன்னோட்டம்

சிறையில் இருந்து கொண்டே டெல்லி முதல்வராக தொடர்ந்து பணியாற்ற முடியுமா என்ற விவாதத்திற்கு மத்தியில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது முதல் உத்தரவை அமலாக்க இயக்குனரகத்தின்(ED) லாக்-அப்பில் இருந்து பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவு டெல்லியில் நீர் வழங்கல் தொடர்பானது. நீர் வழங்கல் இலாகாவைக் கையாளும் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு முதல்வர் தனது உத்தரவை ஒரு குறிப்பு மூலம் வெளியிட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கடந்த வியாழக்கிழமை இரவு ED யால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், ஒரு வாரம் அமலாக்க இயக்குனரகத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி 

"கட்டுப்பாடுகளுடன் அவர் ஆட்சி செய்வது எளிதானது அல்ல"

ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் கெஜ்ரிவால், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசு அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் அவர் தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார் என்று ஆம் ஆத்மி கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. "சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவது நேரடியானதல்ல. வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது கூட்டாளிகளை நீங்கள் சந்திக்க முடியும் என்று சிறை கையேட்டில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டுப்பாடுகளுடன் அவர் ஆட்சி செய்வது எளிதானது அல்ல" என்று டெல்லி திகார் சிறையின் முன்னாள் சட்ட அதிகாரி சுனில் குப்தா தெரிவித்துள்ளார்.