Page Loader
சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது
சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இதுவே முதல் இன்சுலின் டோஸ்

சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது

எழுதியவர் Venkatalakshmi V
Apr 23, 2024
09:38 am

செய்தி முன்னோட்டம்

நீரிழிவு நோயாளியான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 320 ஆக உயர்ந்ததையடுத்து, திகார் சிறையில் இன்சுலின் கொடுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. இன்சுலின் மறுக்கப்பட்ட சர்ச்சைக்கு பிறகும், அவரது உடல்நிலை குறித்து சிறை நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மீது அரவிந்த் கெஜ்ரிவால் ஏமாற்றம் தெரிவித்த ஒரு நாள் கழித்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகத்தால் கடந்த மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்ட பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இதுவே முதல் இன்சுலின் டோஸ் என்று இந்தியா டுடே தெரிவிக்கிறது.

embed

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது

Arvind Kejriwal was given insulin in Tihar Jail: Sources#ArvindKejriwal #TiharJail #insulin (Pooja Shali) pic.twitter.com/m2krUUIrxv— IndiaToday (@IndiaToday) April 23, 2024

இன்சுலின் மறுக்கப்பட்டது

இன்சுலின் மறுக்கப்படுவதாகவும், மெதுவான மரணத்தை எதிர்கொள்வதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றசாட்டு

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், டைப்-2 நீரிழிவு நோயாளி. கடந்த வாரம், ஆம் ஆத்மி கட்சி,"பலமுறை கோரிக்கை விடுத்தும் அவருக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை" என்று குற்றம் சாட்டியது. இதுகுறித்து மதிப்பீடு செய்ய சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஜ்ரிவால், சிறையில் சுமார் 4.5 கிலோ எடையை குறைந்ததாகவும், அவரது இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை அனுபவித்து வருகிறார் எனவும் AAP கூறியது. சிறைத்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையில், டாக்டர்கள் முதல்வருக்கு இன்சுலின் பரிந்துரைக்கவில்லை என்று கூறினர். அவர்களின் கூற்றுப்படி, கெஜ்ரிவாலின் இரத்த சர்க்கரை அளவு இன்சுலின் போடுமளவுக்கு அபாயகரமானதாக இல்லை எனவும், எனினும் அவருக்கு வாய்வழி நீரிழிவு எதிர்ப்பு மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது.