Page Loader
கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் மனு: உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை 

கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உயர்நீதிமன்றத்தில் மனு: உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Mar 23, 2024
07:04 pm

செய்தி முன்னோட்டம்

அமலாக்க இயக்குநரகத்தின் காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தன்னைக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமைக்குள் அந்த மனுவை உடனடியாக விசாரிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த வியாழக்கிழமை மத்திய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை, 6 நாள் அமலாக்க இயக்குனரக காவலில் வைக்க நேற்று டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், அவர் அதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி 

 உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ் 

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிரான கைது மற்றும் ரிமாண்ட் உத்தரவு இரண்டும் சட்டவிரோதமானது என்றும், தன்னை உடனடியாக காவலில் இருந்து விடுவிக்க உரிமை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே அவர் ஒரு மனு அளித்திருந்தார். ஆனால், முதலில், ரிமாண்ட் உத்தரவை எதிர்த்து அவர் போரிட விரும்பியதால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திரும்பபெறப்பட்டது. ரிமாண்ட் விண்ணப்ப விசாரணையின் போது, ​​டெல்லி மதுபான கொள்கை ஊழலின் "முக்கிய சதிகாரர் மற்றும் மன்னன்" கெஜ்ரிவால் தான் என்று அமலாக்க இயக்குனரகம், நீதிமன்றத்தில் வாதிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.