
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
சிதம்பரம் நகரின் பிரசித்திபெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித்திருமஞ்சன திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் டிசம்பர் 26ஆம் தேதியும், ஆருத்ரா தரிசனம் வரும் டிசம்பர் 27ஆம் தேதியும் நடைபெறும். சித்சபைக்கு எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில், வேத ஆகமங்கள் முழங்க சிவாச்சாரியார் கொடியை ஏற்றினார்.
பக்தர்கள் பலரும் இந்த கொடியேற்றத்தில் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து, 26 ஆம் தேதி வரை, தினந்தோறும் பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் நடைபெறும்.
அதேபோல, இந்த 10 நாளும் மாலை, சித்சபை முன்பு மாணிக்கவாசகர் எழுந்தருளி, திருவெம்பாவை உற்சவமும் நடைபெறும்.
ட்விட்டர் அஞ்சல்
ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது!https://t.co/wupaoCzH82 | #Cuddalore #TamilNadu #Chidambaram pic.twitter.com/f2soB2mK3i
— ABP Nadu (@abpnadu) December 18, 2023