ஜம்மு காஷ்மீரின் தோடாவில் என்கவுன்டர் நடவடிக்கை: 4 இராணுவ வீரர்கள் பலி
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமதுவின் (JeM) நிழல் குழுவான 'காஷ்மீர் புலிகள்' பொறுப்பேற்றுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையின் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு நடவடிக்கைக் குழுவின்(SOG) துருப்புக்கள் நேற்று மாலை தோடா நகரத்திலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ள தேசா வனப் பகுதியில் இருக்கும் தாரி கோடே உரார்பாகியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியபோது என்கவுண்டர் வெடித்தது.
ஜம்மு காஷ்மீர்
என்கவுன்டரில் ஐந்து வீரர்கள் படுகாயம்
ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, பயங்கரவாதிகள் தப்பிக்க முயன்றனர்.
ஆனால் ஒரு அதிகாரி தலைமையிலான துருப்புக்கள் சவாலான நிலப்பரப்பு மற்றும் அடர்த்தியான மரங்கள் இருந்தபோதிலும் பயங்கரவாதிகளை துரத்தினர்.
அதனால், கிட்டத்தட்ட இரவு 9 மணியளவில் காட்டில் மற்றொரு துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
என்கவுன்டரில் ஐந்து வீரர்கள் படுகாயமடைந்தனர். அதன் பிறகு, படுகாயமடைந்தவர்களில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
முஜாஹிதீன்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டபோது மோதல் மற்றும் துப்பாக்கிச் சூடு வெடித்ததாக காஷ்மீர் டைகர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை 9-ம் தேதி கதுவாவில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் 'காஷ்மீர் புலிகள்' அமைப்புதான் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.