LOADING...
ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு முப்படைகளும் தயார் - ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!
ராணுவ தளபதி உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு முப்படைகளும் தயார் - ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!

எழுதியவர் Vasuki
May 30, 2026
06:41 pm

செய்தி முன்னோட்டம்

பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு எதிராகத் தேவைப்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நடவடிக்கையைத் தொடங்க இந்திய ஆயுதப் படைகள் முழு ஆயத்த நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். தற்போதைக்கு தற்காலிகமாக மட்டுமே போர்ப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், முப்படைகளும் அடுத்த கட்ட சவால்களுக்குத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இனிவரும் காலங்களில் போர் என்பது நிலம், நீர், ஆகாயத்தோடு மட்டும் சுருங்கிவிடப் போவதில்லை என்று கூறிய ஜெனரல் திவேதி, அது விண்வெளி மற்றும் சைபர் தளங்களிலும் விரிவடையப் போவதாக எச்சரித்தார். போர்க்களங்கள் எப்போதும் கண்காணிப்பிற்குள் இருப்பதால், எல்லைப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பப் போர்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.

ராணுவத்தில் ட்ரோன் புரட்சி

முப்படைகளின் தியேட்டரைசேஷன் திட்டம்

தொழில்நுட்ப மாற்றங்களின் ஒரு பகுதியாக ட்ரோன் பட்டாலியன்கள் மற்றும் அதிநவீனப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தளபதி தெரிவித்தார். ' ஈகிள் ஆன் தி ஆர்ம்' திட்டத்தின் கீழ், நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரரும் ஒரு ட்ரோனை இயக்கும் அசாத்திய திறமை பெற்றவராக மாற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் தியேட்டரைசேஷன் நடைமுறை குறித்த விரிவான அறிக்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய சிடிஎஸ் (CDS) தலைமையின் கீழ் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இந்த சீர்திருத்தம் முழுமையாக அமலுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் உறுதி

உலக நாடுகளுக்கான எச்சரிக்கை

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் அசாத்திய ராணுவ பலம் மற்றும் எந்தவொரு சவாலையும் உடனடியாகத் துல்லியமாக எதிர்கொள்ளும் ஆற்றல் உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த திட்டமிடல், துல்லியமான தாக்குதல், வலுவான வான் பாதுகாப்பு மற்றும் தடையற்ற தகவல்தொடர்பு ஆகியவை முப்படைகளின் வெற்றிக்கு அடித்தளம் என ராணுவ தளபதி தனது உரையில் மிக ஆணித்தரமாகப் பதிவு செய்தார். தான் 40 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற அதே தேசிய பாதுகாப்பு அகாடமியில் தளபதியாக நின்று அணிவகுப்பு மரியாதையை ஏற்பது தனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என்று குறிப்பிட்ட அவர், இளம் அதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பை அரணாகக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Advertisement