
உங்க ஊர்ல சாலைகள்ல பள்ளங்கள் இருக்கா? நம்ம சாலை மொபைல் ஆப்ல புகார் சொல்லுங்க
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பள்ளங்கள் அற்ற சாலை என்ற இலக்கை அடையும் வகையில், பள்ளங்களை குறிப்பிட்ட காலங்களுக்குள் சரிசெய்திட தமிழக அரசு நம்ம சாலை மொபைல் ஆப்பை 2023இல் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், அரசின் செய்தி - மக்கள் தொடர்புத் துறை தற்போது எக்ஸ் பக்கத்தில் இந்த செயலி குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், "சாலைகளில் கண்டறியப்படும் பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் உதவியுடன் அறிந்து சரிசெய்திட நம்ம சாலை செயலி என்னும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி வழியாகப் பொதுமக்கள் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க முடியும். அதன் மூலம் சாலைப் பகுதிகளில் ஏற்பட்ட பள்ளங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சரி செய்யப்படுகின்றன." எனக் கூறி செயலியை டவுன்லோட் செய்து பதிவிறக்க வலியுறுத்தி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் எக்ஸ் தள பதிவு
நம்ம சாலை செயலியை உடனே டவுன்லோட் செய்யுங்கள்@CMOTamilnadu @mkstalin @Udhaystalin@mp_saminathan @evvelu#TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/VNFQmP8kw6
— TN DIPR (@TNDIPRNEWS) July 18, 2025