அடுத்த செய்திக் கட்டுரை
பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்
எழுதியவர்
Venkatalakshmi V
Jun 28, 2023
10:02 am
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசை வெளியான நிலையில், நேற்று (ஜூன் 27 ), பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கல்வி இயக்ககங்கள் கீழ் இயங்கும் 6 அரசு கல்லூரிகளிலும், 4 அரசு நிதி பெறும் கல்லூரிகளிலும், பகுதி நேர பொறியியல் படிப்புகள் நடைபெற்று வருகிறது.
அங்கே இந்த கல்வியாண்டிற்கான பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், நேற்று முதல், (ஜூன் 27.,) முதல் ஆன்லைன் வாயிலாக ஏற்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை www.ptbe.tnea.com என இணையத்தில் பதியலாம். மேலும், விண்ணப்பங்கள் அனுப்ப, ஜூலை 23 கடைசி நாள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பகுதி நேர பொறியியல் படிப்பு
#NewsUpdate | மாணவர்கள் கவனத்திற்கு#SunNews | #Engineering pic.twitter.com/zn9mmTg1v7
— Sun News (@sunnewstamil) June 28, 2023