Page Loader
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 18, 2023
09:35 am

செய்தி முன்னோட்டம்

கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டமான, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி, மகளிருக்கு ரூ.1000 மாதந்தோறும் அவர்கள் வங்கி கணக்கில், அரசு சார்பாக செலுத்தப்படும். இந்த திட்டத்துக்காக மாநிலம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த திட்டத்தில் சேர 1,63,00,000 பெண்கள் விண்ணப்பித்தனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இ-சேவை மூலம் அவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், இதில் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போது தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்