Page Loader
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல்

எழுதியவர் Nivetha P
Mar 15, 2023
06:49 pm

செய்தி முன்னோட்டம்

லஞ்ச புகார் எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலை, நாகை, பொன்னேரி, தேனி, கடலூர், அரக்கோணம் ஆகிய இடங்களில் உள்ள தாலுக்கா அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதே போல் பொன்னேரி, தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகை வாட்டாட்சியர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. சேலம் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அறைகளை பூட்டிய அதிகாரிகள், உள்ளே யாரையும் அனுமதிக்காமல் சோதனை செய்து வருகிறார்கள்.

லஞ்ச ஒழிப்புத்துறை

புதுப்பாளையம் இயங்கும் 2 கட்டுமான வரப்பட அனுமதி பெறும் அலுவலகத்திலும் சோதனை

தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். கடலூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் கதவுகளை மூடி சோதனை நடத்தப்பட்டது. புதுப்பாளையம் பகுதியில் இயங்கும் 2 கட்டுமான வரப்பட அனுமதி பெறும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நீலகிரி மாவட்டம் குன்னூர் பத்திர பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது சிக்கிய பணம் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.