
மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து பயணம் செய்த அண்ணாமலை
செய்தி முன்னோட்டம்
ஏற்கனவே எமர்ஜென்சி கதவினால் சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர் அண்ணாமலை, மீண்டும் விமானத்தில் எமர்ஜென்சி கதவருகே அமர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் விமானத்தில் பயணித்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமானத்தின் அவசர கதவை திறந்ததாக சில வாரங்களுக்கு முன் பெரும் சர்ச்சை கிளம்பியது.
இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் அண்ணாமலை மீண்டும் பயணித்திருக்கிறார்.
அப்போதும் அவர் எமர்ஜென்சி கதவருகே அமர்ந்திருக்கும் படியான ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி கொண்டிருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
பாஜக தலைவர் அண்ணாமலையின் வைரல் வீடியோ
Emergency Exit-ல் மீண்டும் அண்ணாமலை#Annamalai | #Emergencyexit pic.twitter.com/rmi32HB3qR
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 24, 2023